மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலி காட்சி மூலம் இன்று அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
 | 

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

17வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட வாக்குப்பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் நாளை 6ஆம் கட்ட வாக்குப்பதிவும், மே 19ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மே 23ஆம் தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன.

இதையொட்டி, இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கூட்டத்தின் போது, வாக்கு எண்ணிக்கை பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP