கல்விக்கொள்கை: கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!

புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 | 

கல்விக்கொள்கை: கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!

புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஹிந்தி கட்டாயம் என்ற பரிந்துரைக்கு தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் திருத்தப்பட்ட கல்விக்கொள்கை  வரைவுத்திட்டம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக  இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

மேலும், இது குறித்து ஜூலை 31 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு பற்றி கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP