சமூக வலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் அன்று சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ளும் படி சமூக வலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

சமூக வலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ளுங்கள் என முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பே அங்கு தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று, பாஜவும், காங்கிரசும் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையம்,  ‘தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு எந்த விதத்திலும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களும், பிரசாரங்களும் இடம்பெறக்கூடாது எனவும், தேர்தல் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ளுங்கள்’ என்றும் டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அவசர உத்தரவை பிறப்பித்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP