இமயமலையில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும்...விஞ்ஞானிகள் எச்சரிக்கை... !

இமயமலைப் பகுதியில் சுமார் 8 புள்ளி 5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனால் இந்திய-நேபாளம் எல்லை பகுதி பெரிய பாதிப்பை சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 | 

இமயமலையில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும்...விஞ்ஞானிகள் எச்சரிக்கை... !

இமயமலைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித் மற்றும் டெல்லி தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக இமயமலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் இமயமலைப் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட வரைபடம் மற்றும் கார்டோசாட் செயற்கைக்கோளும் இந்த எச்சரிக்கையை உறுதிபடுத்தியுள்ளன.

இதனால் இந்திய - நேபாள எல்லைப் பகுதியில், 15 மீட்டர் வரை இமயமலை சரிய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கும் ஏற்படுவதற்கான அழுத்தம் அந்த பகுதியில் 100 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்றும், அது வெளியாகும போது இதுவரை கண்டிறாத அழிவை அப்பகுதி சந்திக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP