மகாராஷ்டிராவில் தொடர்ந்து 4 முறை நில அதிர்வு!

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
 | 

மகாராஷ்டிராவில் தொடர்ந்து 4 முறை நில அதிர்வு!

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

பல்கார் மாவட்டத்தில் டஹானு(Dahanu) என்ற பகுதியில் அதிகாலை 1.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 என பதிவானது. 

தொடர்ந்து தல்சாரி(Talsari), பாய்சார்(Boisar) மற்றும் டஹானு(Dahanu) பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் முறையே 3.6, 2.9, 2.8 என பதிவாகியுள்ளது. 

நில அதிர்வினால் பல்கார் மற்றும் அதன் சுற்றுவட்டப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும், நில அதிர்வினால் வசல்பாடா(Vasavlapada) என்ற பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP