மருந்து, உணவுப் பொருள் தர ஆய்வாளர் சுட்டுக் கொலை

பஞ்சாப்பில், மருந்து மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தை நிர்ணயித்து அவற்றிற்கு உரிமம் வழங்கும் பெண் அதிகாரி, அவரது அலுவலகத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 | 

மருந்து, உணவுப் பொருள் தர ஆய்வாளர் சுட்டுக் கொலை

பஞ்சாப்பில், மருந்து மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தை நிர்ணயித்து அவற்றிற்கு உரிமம் வழங்கும் பெண் அதிகாரி, அவரது அலுவலகத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பஞ்சாப் மாநிலம் கரார் நகரில் உள்ள மண்டல மருந்து மற்றும் உணவுப் பொருள் தர நிர்ணய அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றிவர், நேகா சோரி. பெண் அதிகாரியான இவர், நேர்மையாகவும், கடும் கெடுபிடிகளுடன் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், அப்பகுதி வர்த்தகர்கள் பலரும் இவர் மீது அதிருப்தியில் இருந்தனர். இவரின் அதிரடி நடவடிக்கைகளால், கலப்படம் அறவே தடுக்கப்பட்டது. இந்நிலையில், நேகா பணியாற்றும் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர், தன் கையில் வைத்திருந்து துப்பாக்கியால், நேகாவை இரு முறை சுட்டான். 

அதில் குண்டு காயமடைந்த நேகா, சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை சுட்ட நபர், தன்னை தானே சுட்டுக் கொண்டு தரையில் சரிந்தான். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மர்ம நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நேகாவின் உடலை பிரேத பரிசாேதனைக்கு அனுப்பி வைத்தனர். 

நேகாவை சுட்ட நபர் யார் என்பதை அறிய, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், அந்த நபர், லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால் கொலை செய்துள்ளதால், அந்த லைசென்ஸ் யார் பெரில் உள்ளது, கொலையின் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். 

இதற்கிடையே, பாகிஸ்தானிலிருந்து, பஞ்சாப் மாநிலத்திற்குள் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்களை, நேகா பல முறை பறிமுதல் செய்ததாகவும், உணவுப் பொருட்களோடு சேர்த்து கடத்த முயன்ற போதை பொருட்கள், நேகாவின் அதிரடி நடவடிக்கைகளால் பல முறை தடுத்து நிறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தோர், பழிவாங்கும் நடவடிக்கையாக நேகாவை கொலை செய்திருக்கலாம் என்ற வகையிலும் விசாரணை நடத்தப்படுகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP