நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 | 

நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேற்குவங்கத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 6வது நாளாக போராட்டம் நீடித்தது. சில தனியார் மருத்துவமனைகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயங்கவில்லை.

மேலும், மேற்கு வங்க மருத்துவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு மாநில மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், இது தேசிய போராட்டமாக மாறியது.

இந்நிலையில், மேற்குவங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக இன்று இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பாக நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டிருக்கும், அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல், திறந்திருக்கும், எனினும், மருத்துவர்களின் வருகை குறைவால், அந்த சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP