உலகிலேயே உயரமான வாக்குசாவடி எங்கு உள்ளது தெரியுமா?

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இமாச்சல பிரதேச மாநிலத்தில் தசிகங்க் என்ற நகரில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே உயரமான வாக்குசாவடி என்ற பெருமையை பெற்றுள்ளது.
 | 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் தசிகங்க் என்ற நகரில் வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தசிகங்க் மற்றும் கேட் ஆகிய கிராமங்களை சேர்ந்த 48 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில், 30 பேர் ஆண்கள்; 18 பேர் பெண்கள் ஆவர்.

தற்போது இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. பனிப்பொழிவினால் தேர்தல் பாதிக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தசிகங்க் பகுதியை இணைக்கும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால், புதிய சாலை அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இப்பகுதியில் வருகிற 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP