தூர்தர்ஷன்  எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா?

இந்தியாவின் முதல் தொலைக்காட்சி சேனலான தூர்தர்ஷன் வெற்றிகரமான தன் 60 - வது ஆண்டில் காலடி வைத்துள்ளது. 1959 - ல் தொடங்கப்பட்ட தூர்தர்ஷன் பல தடைகளை தாண்டி தற்போது 60 வயதை எட்டியுள்ளது.
 | 

தூர்தர்ஷன்  எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா?

இந்தியாவின் முதல் தொலைக்காட்சி சேனலான தூர்தர்ஷன் வெற்றிகரமாக  60 - வது ஆண்டில் காலடி வைத்துள்ளது. 1959 - ல் தொடங்கப்பட்ட தூர்தர்ஷன் பல தடைகளை தாண்டி, இன்று (செப்.15) 60 வயதை எட்டியுள்ளது. தரமான நிகழ்ச்சித் தொகுப்பினால், இந்தியா மட்டுமன்றி, பல நாடுகளிலும் கால் பதித்திருக்கிறது. 

தூர்தர்ஷன் தொடங்கிய காலம் முதல் மாற்றாத லோகோவை தற்போது மாற்றவும், சேனலை புதுப்பிக்கும் நோக்கத்துடனும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. எனினும் அதன் பழைய லோகோ  இந்திய தொலைக்காட்சி லோகோக்களிலேயே மிகச் சிறந்த லோகோ என்ற பாராட்டு பெற்றதுடன் ரூ. 1 லட்சம் பரிசாகப் பெற்றது.

1959 - ல் ஆல் இந்திய வானொலி மையத்தின் ஒரு பகுதியில் தான் தூர்தர்ஷன் தொடங்கப்பட்டது. ஆறு வருடங்கள் கழிந்த நிலையில், 1965 ஆம் ஆண்டு, பிரத்திமாபூரி, முதல் முறையாக 5 நிமிட செய்தியை வாசித்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி கேகரினின் பேட்டி, 1982 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் சுதந்திர தின பேச்சு, 1982 ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய போட்டிகள் என அனைத்தும் ஒளிபரப்பப்பட்டு, தூர்தர்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக உயரம் காணத் தொடங்கியது. 

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான, து து மைன் மைன், மஹாபாரதம், தேக் பாய் தேக், உதான், மால்குடி டேஸ் போன்றவை மக்களை மிகவும் கவர்ந்து, தினமும் தூர்தர்ஷன் முன் அமர வைத்தன. 1990 களில் தூர்தர்ஷனுக்கு தன்னாட்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு, 1997 ப்ரச்சார் பாரத சட்டம் கொண்டு வரப்பட்டது.

தற்போது நிறைய சேனல்கள் தொடங்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், தூர்தர்ஷன் என்றும் அதற்கான தரம் குறையாது இருப்பதால் தான் இன்று 60 ஆண்டுகள் கடந்து சாதனை புரிந்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP