பிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா?

பிரதமர் மோடியின் செயல்களை பாராட்டி வெளிநாட்டு அரசு பிரதமர் மோடிக்கு கொடுத்த விருதுகள் எத்தனை தெரியுமா?
 | 

பிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா?

இந்திய பிரதமராக பதவி வகித்த 6 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளின் மிக உயரிய விருதுகளான 7 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுடன் வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்தவும், வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தவும், வெளிநாடுகளுடன் நட்பு பாராட்டி வருகிறார். இந்த 6 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுடன் வணிக ரீதியான, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பிரதமர் மோடியின் செயல்களை பாராட்டி வெளிநாட்டு அரசு பிரதமர் மோடிக்கு கொடுத்த விருதுகள் எத்தனை தெரியுமா? 

ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு சவுதி அரேபிய நாட்டின் மிக உயரிய விருதான "ராஜா அப்துல்ஸீஸ் சாஷ்" என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

பிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா?

2016 ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு மிக உயரிய விருதான அமீர் அமனுல்லா கான் விருதை வழங்கி கவுரவித்தது. 

பிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா?

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பாலஸ்தீனம் நாட்டிற்கு முதல்முறையாக இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்ற இந்திய பிரமர் மோடிக்கு பாலஸ்தீனத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான "கிராண்ட் காலர்" விருதை அந்நாட்டு அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வழங்கி கவுரவித்தார். 

பிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா?

சுற்றுச் சூழல் மாசுபாட்டினை தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளை பராட்டும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகளின் மிக உயரிய, சர்வதேச விருதான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது வழங்கப்பட்டது.  இந்த விருதினை ஐநா பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் வழங்கினார்.

பிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா?

இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களிப்பை வழங்கியமைக்காகவும், கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது. 

பிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா?

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு, இரு நாட்டு உறவை மேம்படுத்த முக்கிய காரணமாக இருந்ததற்காக அந்நாட்டின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆப் சயீத்' விருது, வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா?

இதேபோல் ரஷ்யா- இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக ரஷ்யாவின் மிக உயரிய விருதான  புனித ஆண்ட்ரூ விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கயிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP