ஒடிசா: பெட்ரோல் விலையை விட அதிகரித்தது டீசலின் விலை!

ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலையை விட டீசலின் விலை அதிகமாக உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய் 57 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், டீசல் விலை 12 காசுகள் அதிகமாக 80 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.
 | 

ஒடிசா: பெட்ரோல் விலையை விட அதிகரித்தது டீசலின் விலை!

ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலையை விட டீசலின் விலை அதிகரித்து விற்பனையாகி வருகிறது. 

2017ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் பெட்ரோல் டீசலின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இம்முறை அமலுக்கு வந்து ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க வலியுறுத்தி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் மத்திய அரசு பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க வரியை ரூ.2.50 குறைத்துள்ளது. மேலும் ஒரு சில மாநில அரசுகளின் வரிக் குறைப்பால், இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல், டீசலின் விலை சுமார் 5 ரூபாய் அளவிற்கு குறைந்தது.

இந்நிலையில் ஒடிசாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய் 57 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், டீசல் விலை 12 காசுகள் அதிகமாக 80 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP