Logo

பாஜகவுடன் இணைந்த பின்னர் துணை முதலமைச்சர் அஜித் பவார் ட்விட்டரில் வெளியிட்டுள்ள முதல் பதிவு!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்து, துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவிற்கும் தனது நன்றியை பதிவு செய்துள்ளார்.
 | 

மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நேற்று பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். இதை தொடர்ந்து, ஏற்கனவே ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் அதிருப்தியடைந்துள்ளனர். இதன் விளைவாக, பாஜகவிற்கும், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையில், துணை முதலமைச்சராக பதிவியேற்றிருக்கும் அஜித் பவார், ஆட்சி அமைப்பது குறித்த விவகாரங்களை தொடர்ந்து, தற்போது முதல் முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தங்கள் மீது நம்பிக்கை வைத்து, தங்களுடன் இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் பாஜகவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்ததுடன், அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றி நிலையான ஆட்சியை அம்மாநிலத்திற்கு அளிப்போம் என்ற உறுதியையும் அளித்துள்ளார் அஜித் பவார். 

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களான, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி மற்றும் நிதின் கட்கரி ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரான அஜித் பவார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP