டெல்லியில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம்: கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு!

டெல்லியில் முதல் 200 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது டெல்லி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

டெல்லியில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம்: கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு!

டெல்லியில் 200 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் கெஜ்ரிவால் அரசு மின்கட்டணம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. 

அதன்படி, டெல்லி மக்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படவுள்ளதாகவும், 201 முதல் 400 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு 50% மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த புதிய கட்டண விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

மேலும், இந்த அறிவிப்பின் மூலம், இந்தியாவிலே டெல்லியில் தான் மின்சாரக்கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் இலவச மின்சாரம் என்பதால் மக்கள் தேவைக்கு ஏற்ப மட்டுமே உபயோகித்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP