டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 36வது கூட்டம் தொடங்கியது!

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 | 

நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (GST) என கடந்த ஜூலை 1, 2017 அன்று மத்திய அரசால் கொண்டுவரபட்டது. இதன் 36வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூலை 25ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர் சில காரணங்களால் இது ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்ந்து, இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தில் 36வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர். 

வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP