டெல்லி விஷவாயுக்களின் புகலிடமாக மாறிவிட்டது; வருங்காலத்தில் நான் இங்கு வசிக்க மாட்டேன்- உச்ச நீதிமன்ற நீதிபதி

டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான பொதுநல வழக்கில், வருங்காலத்தில் டெல்லியில் மக்கள் வாழும் ஒரு சூழ்நிலை இருக்காது, நானும் பணிக்காலம் முடிந்த பிறகு டெல்லியில் வசிக்க மாட்டேன் என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
 | 

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பான ஒரு பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், வாதம் நடைபெற்றது. 

பின்னர் நீதிபதிகள், "டெல்லியில் காற்று மாசுபாட்டை போக்க அரசு முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லி மாநகரம் விஷவாயுவின் புகலிடமாக மாறிவிட்டது. டெல்லியில் வசிப்பது என்பது மிகவும் கஷ்டமாகி விடும். பணிக்காலம் முடிந்த பிறகு நான் இன்று வசிக்க மாட்டேன். வருங்காலத்தில் டெல்லியில் வசிக்க முடியாது. மக்கள் வாழும் ஒரு சூழ்நிலை இருக்காது" என தெரிவித்தனர். 

தொடர்ந்து, டெல்லி மாநகர காவல்துறை இதுகுறித்து அறிக்கை தர உத்தரவிட்டு, நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP