டெல்லி: ஆளுநர்கள் மாநாடு தொடங்கியது!

ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுக்கான 2 நாள் மாநாடு டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் தொடங்கியது
 | 

டெல்லி: ஆளுநர்கள் மாநாடு தொடங்கியது!

ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுக்கான 2 நாள் மாநாடு டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் தொடங்கியது. 

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுக்கான 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 

இன்று மற்றும் நாளை நடைபெறும் இம்மாநாட்டில், ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் பழங்குடியினர் விவகாரங்கள், வேளாண் சீர்திருத்தம், உயர் கல்விக்கான புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP