டெல்லி: நரமாமிச குற்றச்சாட்டு; ஆப்பிரிக்கர்களை சிறைபிடித்த பொதுமக்கள்!

டெல்லி: நரமாமிச குற்றச்சாட்டு; ஆப்பிரிக்கர்களை சிறைபிடித்த பொதுமக்கள்
 | 

டெல்லி: நரமாமிச குற்றச்சாட்டு; ஆப்பிரிக்கர்களை சிறைபிடித்த பொதுமக்கள்!

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 6 பேரை, நரமாமிசம் உண்ணுவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சிலர் சிறைபிடித்து வைத்திருந்த நிலையில், போலீசார் விரைந்து அனைவரயும் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

புதுடெல்லியில் துவாரகா கக்ரோலா பகுதியில், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பலர் தங்கியுள்ளனர். படிக்கும், வேலை செய்யும், பல ஆப்பிரிக்க இளைஞர்கள் அங்கு தங்கியுள்ளர். ஆப்பிரிக்கர்களுக்கும் அங்குள்ள பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அங்கு ஒரு 16 வயது சிறுவன் காணாமல் போனதாகவும், அவனை நரமாமிசம் உண்ணும் ஆறு ஆப்பிரிக்கர்கள் கடத்தி கொலை செய்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஆப்பிரிக்கர்கள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து அந்த பகுதி மக்கள் ஒன்று கூடி இருந்தனர். போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டை பூட்டிக் கொண்டு அவர்கள் 6 பேரும் உள்ளேயே இருந்தனர். இந்நிலையில், போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து ஆப்பிரிக்கர்கள் 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். சம்பவத்தின் போது, அங்கு கூடியிருந்த மக்கள் 'நரமாமிசம் உண்ணும் ஆப்பிரிக்கர்கள்' என கோஷம் போட்டுக் கொண்டே இருந்தனர். 

16 வயது சிறுவன் மாயமானதாக அந்த பகுதியில் யாரோ வதந்தியை பரப்பி விட்டதாக தெரிய வந்துள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணம், அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் ஆப்பிரிக்க பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான் என கூறப்படுகிறது. டெல்லியில் கருப்பினத்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP