டெல்லி காற்று மாசு: வாகனக்கட்டுப்பாடு இன்று முதல் அமல்!

டெல்லியில் காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
 | 

டெல்லி காற்று மாசு: வாகனக்கட்டுப்பாடு இன்று முதல் அமல்!

டெல்லியில் காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

டெல்லியில் தீபாவளி பண்டிகையைதொடர்ந்து காற்று மாசு அதிகரித்துள்ளது. தற்போது டெல்லியின் பல இடங்களில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் டெல்லியில்  ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த விதிமுறைப்படி, பதிவு எண்ணின் இறுதியில் ஒற்றைப்படை எண்கள் கொண்ட நான்கு சக்கர வாகனங்கள் (1,3,5,7,9) நவ.4,6,8,10,12,14 ஆகிய தேதிகளில் சாலைகளில் செல்ல அனுமதி கிடையாது. இதேபோல், இரட்டைப்படை எண்கள் கொண்ட நான்கு சக்கர வாகனங்கள் (0,2,4,6,8) நவ. 5,7,9,11,13,15 ஆகிய தேதிகளில் சாலைகளில் செல்வதற்கு அனுமதி கிடையாது. 

இந்த வாகனக்கட்டுப்பாடு இன்று காலை 8 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதால், டெல்லியின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாகனக்கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனக்கட்டுப்பாடு திட்டம் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP