டெல்லி: கணவருக்காக காத்திருந்த  59 வயதான பெண் சுட்டுக் கொல்லப்பட்டதால்  பதற்றம் நிலவுகிறது!

டெல்லியில் தன்னுடைய கணவர் கோவிலில் இருந்து திரும்பி வருவதற்காக காத்திருந்த 59 வயதான பெண் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 | 

டெல்லியில் உள்ள   மது விஹார் பகுதியில் உஷா சாஹ்னி  என்னும்  59 வயதான பெண் அவரது கணவர் கோயிலில் இருந்து திரும்புவதற்காக அவரது காரில்  காத்திருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி விட்டார்.

பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் ரத்தவெள்ளத்தில் காரில் மயங்கிய நிலையிலிருந்த  உஷா சாஹ்னியை மீட்டு அருகில் இருந்த மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் முன்னரே அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP