இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!!

அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, இந்து முஸ்லிம் இனத்தவரிடையே எந்த வகையான பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், இந்தியர்களிடையே அமைதியை நிலைநாட்டவதற்காகவும் இந்து-முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து உரையாடல் மேற்கொண்டிருந்தார் மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
 | 

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தியா வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டி.ஒய்.சந்திரசூட், எஸ்.ஏ.பாப்டே, அப்துல் நசீர், அசோக் பூஷன் நீதிபதிகள் அமைந்த அமர்வு இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலான ஓர் தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின்படி, அயோத்தியாவின் சர்ச்சைகுரிய நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் குறித்த ஆவணங்கள் மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது உச்ச நீதிமன்றம்.

இதனிடையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு வழக்கில் வெற்றி பெறபோவது யாராக இருப்பினும் மற்றவரை புண்படுத்தும் வகையிலான கொண்டாட்டங்களை மேற்கொள்ள கூடாது என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது மத்திய அரசு.

இதை தொடர்ந்து, தீர்ப்பில் வெற்றி பெற்றுள்ள போதும், அயோத்தியாவில் உள்ள கோவிலில் தீபம் ஏற்றி பூஜை செய்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட இந்துக்கள், மத்திய அரசின் உத்தரவை ஏற்று வேறு எந்த வகையிலும் தங்களின் வெற்றியை காண்பித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இந்து-இஸ்லாமிய மதங்களின் சுவாமி சித்தானந்த் சரஸ்வதி, அவதேஷானந்த் கிரி, ஷியா அமைப்பை சேர்ந்த கல்பே ஜவாத் போன்ற முக்கிய தலைவர்களை இன்று சந்தித்த மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, இரு மத இனத்தவருக்கு இடையே போராட்டங்களும், கலவரங்களும் ஏற்படாமல் தடுப்பதற்காக அமைதியும் அன்பும் நிறைந்த கருத்துக்களை மக்களிடம் பரப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP