என்.டி.திவாரி மகன் ரோஹித் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை 

ஆந்திர மாநில முன்னாள் கவர்னரும், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் முன்னாள் முதல்வருமான மறைந்த தலைவர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் அவரது வீட்டில் மர்ம முறையில் மரணம் அடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 | 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த அரசியல் தலைவராக இருந்தவர் என்.டி.திவாரி. உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் முதல்வராக பதவி வகித்துள்ளார். ஆந்திர மாநில கவர்னராகவும் இருந்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ் தலைமையிலான அமைச்சரவையில், மத்திய வெளியுறவு மற்றும் நிதியமைச்சராக இருந்துள்ளார். 

இவர், பல ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், அதன் மூலம் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அதை அவர் ஏற்க மறுப்பதாகவும் கூறி, பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், திவாரி மற்றும் அந்த பெண்ணின் மகன் ஆகியோரின் மரபணுக்ககள் சாேதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பின், திவாரி, தன் தவறை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், கடைசியாக பா.ஜ.,வில் சேர்ந்த திவாரி, வயது முதிர்வின் காரணமாக இறந்தார். 

இதற்கிடையே, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின், திவாரியின் மகன் என தன்னை நிரூபித்த ரோஹித், 40, டெல்லியில் மர்ம முறையில் இறந்தார். அவரின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் தலையணையால் அழுத்தப்பட்டதில், மூச்சுத் திணறி இறந்தாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் இது குறித்து விசாரணையை துவங்கியுள்ளனர். அவரது உறவினர்களிடமும் விசாரித்து வருகின்றனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP