முன்னாள் முதல்வரின் மகன் மரண வழக்கு : மனைவிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

இச்சம்பவம் தொடர்பாக என்.டி. திவாரியின் மருமகளை, அதாவது ரோஹித்தின் மனைவியான அபூர்வா திவாரியை, டெல்லி போலீஸார் ஏப்ரல் 24 -ஆம் தேதி கைது செய்தனர்.
 | 

முன்னாள் முதல்வரின் மகன் மரண வழக்கு : மனைவிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித், 40, கடந்த ஏப்ரல் மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், "ரோஹித் தலையணையால் அழுத்தப்பட்டதில், மூச்சுத் திணறி இறந்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது மர்ம மரணம் குறித்து டெல்லி போலீஸார் ரோஹித்தின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக என்.டி. திவாரியின் மருமகளை, அதாவது ரோஹித்தின் மனைவியான அபூர்வா திவாரியை, டெல்லி போலீஸார் ஏப்ரல் 24 -ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த நிலையில்,  அபூர்வாவுக்கு எதிராக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP