சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்!

மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ் நிறைவேற்றியுள்ளார்.
 | 

சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்!

மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ் நிறைவேற்றியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவிற்கு ஆதரவாக வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே என்பவர் வாதாடினார். இந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக வாதாடியதற்காக ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாக பெற்றுக் கொள்வதாக வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது உங்களது ஊதியமான ஒரு ரூபாயை நாளை மாலை 6 மணிக்கு சந்தித்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் உடல் நிலை குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

இதன்பின்னர் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயை அவரது சுஷ்மா சுவராஜ் மகள் சுவராஜ் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தனது தாயாரின் கடைசி ஆசையான ஹரிஷ் சால்வே வழங்க வேண்டிய ஒரு ரூபாய் ஊதியத்தை வழங்கினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP