தர்ணா போராட்டம் வெற்றி: மம்தா

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக, கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது தங்களுக்கு கிடைத்துள்ள தார்மீக வெற்றி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 | 

தர்ணா போராட்டம் வெற்றி: மம்தா

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக, கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்யக்கூடாது என  உச்சநீதிமன்றம் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது தங்களுக்கு தர்ணா போராட்டத்துக்கு கிடைத்துள்ள தார்மீக வெற்றி என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட கோரி, சிபிஐ தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, "இவ்வழக்கின் விசாரணைக்காக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார், சிபிஐ முன் மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில்  ஆஜராக வேண்டும்" என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், கொல்கத்தா மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உச்சநீதிமன்றத்தின்  இந்த உத்தரவு குறித்து கூறியது:

வழக்கு விசாரணைக்காக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்யக் கூடாது. அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தங்களது போராட்டத்துக்கு கிடைத்துள்ள தார்மீக வெற்றி.

நாங்கள் சட்டத்தையும், சிபிஐ உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புகளையும் மதிக்கிறோம். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படுகிறோம். ஆனால், கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்யும் நோக்கத்துடன், சிபிஐ அவரின் வீட்டிற்குள் நுழைந்ததுதான் எல்லா பிரச்னைக்கு அடிப்படை காரணம்.

எனது தர்ணா போராட்டத்தை தொடர்வது குறித்து நவீன் பட்நாயக், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மம்தா பேசினார்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP