இருள் சூழ்ந்துள்ள காஷ்மீர் - அவதிக்குள்ளாகும் மக்கள்!!!

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில், பனிச்சரிவினால் மின் கட்டங்கள் சீர்குலைந்ததை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக மின்சார வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர் காஷ்மீர் மக்கள்.
 | 

இருள் சூழ்ந்துள்ள காஷ்மீர் - அவதிக்குள்ளாகும் மக்கள்!!!

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில், பனிச்சரிவினால் மின் கம்பங்கள் சீர்குலைந்ததை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக மின்சார வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர் காஷ்மீர் மக்கள்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பனிச்சரிவு அதிகரித்து வந்த நிலையில், போக்குவரத்துகள் பாதிப்படைந்திருந்தன. நாட்டின் பிற பகுதிகளுடன் காஷ்மீர் பிரதேசத்தை இணைக்கும் ஒரே நெடுஞ்சாலையும் பனிப்பொழிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், மின் கம்பங்களை காஷ்மீருடன் இணைக்கும் ஒலிபரப்பு கோபுரங்கள், மிகபெரும் பனிச்சரிவினால் இடிந்து விழுந்து விட்டன. 

இதை தொடர்ந்து, வடக்கு ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் பாராமுல்லாஹ் மற்றும் பந்திபூர் நகரங்களும், தெற்கில் அமைந்திருக்கும் குல்காம், ஷோப்பியன் மற்றும் புல்வாம் பகுதிகளும் வெகுவான பாதிப்பை சந்தித்துள்ளன. மின்சாரம் தண்ணீர் என்று எதுவும் கிடைக்காததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர் அப்பகுதி மக்கள். 

இது குறித்து கூறும் காஷ்மீர் மக்கள், நிலைமை மோசமடைந்து வருவது தெரியும் போது, தண்ணீரும் மின்சாரமும் போதுமான அளவு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதிகாரிகள் அதை செய்யாமல் தவறி விட்டனர் என்று குற்றம் சுமத்தியுள்ளனர். காஷ்மீரின் தற்போதைய பனிச்சரிவினால் மட்டும் சுமார் 5000 மின் கம்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

மக்களின் தினசரி வேலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆப்பிள் விளை நிலங்களும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிச்சரிவினால் குப்பைகளை தனித்து வைப்பதற்கு கூட ஓர் தனி இடமில்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர் காஷமீர் பிரதேச மக்கள்.

இவர்களை தொடர்ந்து, காஷ்மீரின் நிலையை சீராக்க அரசு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தொடர் பனிச்சரிவினால் முழுமையாக செயல்படுத்த முடியாமல் போவதாகவும், வெகு விரைவில் மக்களின் நிலையை அரசு சீர் செய்யும் என்றும் உறுதியளித்துள்ளனர் அப்பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP