இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.பி டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 | 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழக எம்.பி டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக கட்சியின் பொதுச் செயலராக இருந்த எஸ்.சுதாகர் ரெட்டி உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழுவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் டி.ராஜா, கட்சியின் அடுத்த பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பியாக உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP