சுங்கத்துறை அதிகாரிகளை தாக்கிய பெண்கள் கைது!!

அஹமதாபாத் நகரின் சர்வதேச விமான நிலையத்தில், தாங்கள் அணித்து வந்த தங்க வளையல்களுக்கான ரசீதை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்த சுங்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட இருபெண்களை கைது செய்துள்ளனர் குஜராத் விமான நிலைய போலீசார்.
 | 

துபாயிலிருந்து இந்தியாவின் குஜராத் மாநில அஹமதாபாத் நகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இரு பெண்கள் மீதும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பொதுவான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களுக்கான ரசீதை காண்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் சுங்கத்துறை அதிகாரியான டீதேன். இதனால் அதிருப்தி அடைந்த பெண்கள் இருவரும் சுங்க அதிகாரிகளுடன் சண்டையிட்டதோடில்லாமல் சுங்கத்துறை துணை அதிகாரி மைகுவெல் மிராண்டாவை தாக்கியுள்ளனர். இவர்களை தொடர்ந்து, இந்த பெண்களுடன் பயணித்த ஆண்கள் இருவரும், விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்பொழுது பார்த்து கொள்வதாக டீதேனுக்கு ஓர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார், இந்திய பாதுகாப்பு சட்டம் 332, 253, 323, 186, 294 மற்றும் 506 ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து, அந்த இரு பெண்களும் அணிந்து வந்த தங்க ஆபரணங்களையும் கைபற்றி சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP