வாக்குகளுக்காகவே புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: சமாஜ்வாதி எம்.பியின் சர்ச்சை பேச்சு!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் வாக்குகளைப் பெறவே புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் பேசியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
 | 

வாக்குகளுக்காகவே புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: சமாஜ்வாதி எம்.பியின் சர்ச்சை பேச்சு!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் வாக்குகளைப் பெறவே புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சமாஜ்வாதி கட்சி எம்.பி ராம் கோபால் யாதவ் பேசியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14ம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிறைந்த தங்கள் வாகனத்தை மோத வைத்தனர். இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். இதற்கு இந்திய விமானப்படையும் தகுந்த பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் பிரச்சார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் கோபால் யாதவ், பீகார் மாநிலம் பாட்னா அருகே நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "தேர்தலில் பாஜக அரசு, மக்களின் வாக்குகளை பெறவே புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டது. துணை ராணுவப்படையினர் மத்திய அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். ஒரு சில வீரர்கள் என்னிடம் வருத்தமுற்று பேசினார்கள். 

ராணுவ வாகனம் செல்லும் வழியில் எந்தவித சோதனையும் முறையாக நடைபெறவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. மத்திய அரசின் அலட்சியத்தினாலே இந்த சம்பவம் நடந்துள்ளது. வரும் தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், புல்வாமா தாக்குதல் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்" என்று மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

ராம்கோபால் யாதவ்வின் இந்த பேச்சுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், "ராம்கோபால் யாதவ் இழிவான அரசியலை மேற்கொள்கிறார். நாட்டிற்காக நமது வீரர்கள் செய்த உயிர் தியாகத்தை கறைபடுத்தியதற்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP