கண்ணையா குமாருக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசத்துரோக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், டெல்லி போலீசார் பதிவு செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
 | 

கண்ணையா குமாருக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் நிகழ்ச்சியில் தேசத்துரோக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், டெல்லி போலீசார் பதிவு செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கடந்த 2016ம் ஆண்டு, மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார் தலைமையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், டெல்லி நாடாளுமன்ற தாக்குதலுக்கு காரணமான முக்கிய தீவிரவாதி அஃப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு எதிராக மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அதில், இந்திய அரசுக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறி, மாணவர்கள் இயக்கத் தலைவர் கண்ணையா குமார், உமர் கலீத் உட்பட பலர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். 

கண்ணையா குமார், உமர் கலீத் உள்ளிட்ட 10 மாணவர்களுக்கு எதிராக 1200 பக்க குற்றப்பத்திரிகையை கடந்த திங்களன்று டெல்லி போலீசார் தாக்கல் செய்தனர். அதில் 7 பேர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த வழக்கில், டெல்லி அரசு சட்டத்துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என நீதிபதி கூறியிருந்த நிலையில், டெல்லி போலீசார் அனுமதி பெறவில்லை."சட்டத் துறையிடம் இருந்து அனுமதி ஏன் பெறவில்லை. அனுமதி இல்லாமல் எப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தீர்கள்" என போலீசாரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனால், இந்த குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP