அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் ரதுல் புரியை திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விமான ஊழல் வழக்கில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் மருமகன் ரதுல் புரியை அக்டோபர் 1ம் தேதி வரை திஹார் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

மத்தியப் பிரதேச மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத்தின் மருமகன் ரதுல் புரி தொழிலதிபர் ஆவர். இவர் வி.ஐ.பிகளுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார்.

இதில், இவர் மோசடி செய்தது குறித்து சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் ரதுல் புரியை வருகிற அக்டோபர் 1ம் தேதி வரை டெல்லி திஹார் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP