ஊழல் புகார்: இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் கைது.. திடுக்கிடும் தகல்கள்...!

டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் நடத்திய சோதனையின்போது அங்கு ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதை சிபிஐ கண்டறிந்தது. இதையடுத்து, அந்த ஆணையத்தின் இயக்குநர், அதிகாரிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

ஊழல் புகார்: இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் கைது.. திடுக்கிடும் தகல்கள்...!

இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் மற்றும் அதிகாரிகள், தனிநபர்கள் உள்ளிட்ட 6 பேரை ஊழல் புகாரில் சிபிஐ கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் விசாரணைக்காக சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி லூதியானா சாலையில் உள்ள விளையாட்டு ஆணையத்தின் தலைமையகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 3 சதவீத கமிஷன் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரூ.19 லட்சம் மதிப்பிலான ரசீதுகளுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் எஸ்.கே.சர்மா, இளநிலை கணக்கு அதிகாரி ஹரிந்தர் பிரசாத், மேற்பார்வையாளர் லலித் ஜோலி, மற்றொரு அதிகாரி வி.கே.சர்மா, தனியார் ஒப்பந்ததாரர் மந்தீப் அஹுஜா, அவரது உதவியாளர் யூனஸ் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து, ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக, அந்த 6 நபர்களையும் சிபிஐ, காவலில் எடுத்துள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP