நாதுராம் கோட்சே குறித்து சர்ச்சை பேச்சு- பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்

நாதுராம் கோட்சே தேச பக்தர் என கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பிரக்யா தாகூரை தொடர்ந்து 3 பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 | 

நாதுராம் கோட்சே குறித்து சர்ச்சை பேச்சு- பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்

நாதுராம் கோட்சே ஓர் தேச பக்தர் என கூறி  சர்ச்சையை ஏற்படுத்திய பிரக்யா தாகூரை தொடர்ந்து 3 பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர், நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார். அவரை தீவிரவாதி என்று அழைப்பவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, பிரக்யா சிங்கின் இந்த கருத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. கோட்சே பற்றிய பிரக்யா சிங்கின் கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடில்லை என்றும் பாஜக தலைமை கூறியது.

தொடர்ந்து, பாஜக சார்பில் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தம்முடைய கருத்துக்கு பிரக்யா சிங் மன்னிப்பு கோரினார். இதனிடையே, பிரக்யா தாகூரை தொடர்ந்து, கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்த குமார், நாதுராம் கோட்சே பற்றிய உண்மையை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதே போல் கர்நாடக பாஜக எம்பி நளின் குமார் காடீல் தனது ட்விட்டர் பதிவில், கோட்சே ஒருவரை கொன்றார், கசாப் 72 பேரை கொன்றார், ராஜீவ் காந்தி 17 ஆயிரம் பேரை கொன்றார். இதில் யார் அதிக கொடூரமானவர் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என பதிவிட்டு அவர் பங்குக்கு அவரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து இந்த மூவரும் 10 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP