சர்ச்சைக்குரிய மாஜி பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு ராஜமரியதை!

கேரள கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ராஜ மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
 | 

ஜலந்தர் பகுதியின் பிஷப்பாக பதவி வகித்து வந்த பிராங்கோ முலக்கல், தன்னை 2014 முதல் 2016ம் ஆண்டு வரை, பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக, கேரளாவை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. அவரை கைது செய்ய மாநிலம் முழுவதும் கோரிக்கை எழுந்த நிலையில், அவரை பதவியில் இருந்து விலக்க, வாட்டிக்கன் ஆலோசித்து வந்தது பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்து, வழக்கை சந்திக்கப் போவதாக முலக்கல் தெரிவித்தார். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீன் பெற்று, பஞ்சாப் சென்றுள்ளார் முலக்கல். இந்நிலையில், ஜலந்தரில் அவருக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டது. பூக்கள் தூவி, உற்சாகத்துடன் அவரது ஆதரவாளர்கள் முலக்கல்லை வரவேற்றனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP