தொடர் கனமழை: கேரளாவின் 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 | 

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி, கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரம் மாவட்ட கடலோரப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டு அவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கடல் சீற்றம் காணப்படுவதால் கேரளா, கர்நாடகா, தென்தமிழ்நாடு, இலட்சத்தீவு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP