உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உ.பி தலைமைச்செயலாளருடன் ஆலோசனை

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதையொட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உ.பி. தலைமைச்செயலாளரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
 | 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உ.பி தலைமைச்செயலாளருடன் ஆலோசனை

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதையொட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உ.பி. தலைமைச்செயலாளரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் அயோத்தி வழக்கில் பல ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இவ்வழக்கில் பலகட்ட விசாரணைகள் மற்றும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவ.14ஆம் தேதிக்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அயோத்தியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பதற்றம் நிறைந்த மாவட்டமாக கருதப்படும் அம்பேத்கார் நகர் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு கல்லூரி வளாகங்களில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உ.பி. தலைமைச்செயலாளரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காவல்துறை இயக்குநர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம், ஒழுங்கு விவகாரம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP