காங்கிரஸுக்கு அடி மேல் அடி: அகஸ்டா வெஸ்ட்லேண்டை தொடர்ந்து இடியாக இறங்கவுள்ள ஏர்-இந்தியா விவகாரம்!

அகஸ்டா வெஸ்ட்லேண்ட்டை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா நிறுவன ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை விரைவில் சம்மன் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.
 | 

காங்கிரஸுக்கு அடி மேல் அடி: அகஸ்டா வெஸ்ட்லேண்டை தொடர்ந்து இடியாக இறங்கவுள்ள ஏர்-இந்தியா விவகாரம்!

அகஸ்டா வெஸ்ட்லேண்ட்ஸ் விவகாரத்தை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா நிறுவன ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை விரைவில் சம்மன் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

ஊழல், முறைகேடு விவகாரங்களில் காங்கிரஸ் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருவது அக்கட்சிக்கு அரசியல்ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக்  கூட்டணி (யுபிஏ 1) அரசு, ஏர் இந்தியா நிறுவனத்துக்காக 43 பயணிகள் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்ஸை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்துடன், 2005-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது.

ரூ.8,000 கோடி மதிப்பீட்டிலான இந்த ஒப்பந்தப்படி, 2007-இல் 43 ஏ320 ரக பயணிகள் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், தங்களது நிறுவனத்தின் விமானங்களை பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் மையங்கள், அதற்கான பயிற்சி மையங்களை ஏர்பஸ் நிறுவனம் இந்தியாவில் அமைக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிபந்தனைகளை ஏர்பஸ் நிறுவனம் நிறைவேற்றாததும், இதனை ஏர் இந்தியா நிறுவன நிர்வாகம் கண்டு காணாமல் இருந்ததும் 2010-இல் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, இதுதொடர்பாக ஏர்பஸ் நிறுவனம்  மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின்  ஏழு உயரதிகாரிகள் மீது 2013 -இல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

அதைத்தொடர்ந்து, ஏர்பஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கிரண் ராவ் உள்ளிட்ட  ஏழு பேர் மீது, அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம்,  விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த புரஃபல் படேல் உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை  விரைவில் சம்மன் அனுப்ப உள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வரி விவரங்களை மறுமதிப்பீடு செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் நிலக்கரி அமைச்சக முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அகஸ்டா வெஸ்ட் லேண்ட்ஸ் விவகாரம் என காங்கிரஸுக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது, ஏர் இந்தியா விவகாரம் அக்கட்சிக்கு அடித்த இடியாக இறங்கவுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP