Logo

வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்! புதிய தலைவர் தேர்வு..

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டமானது வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்னரே காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக காரிய கமிட்டி கூடி முடிவெடுக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். அவரையே தொடர்ந்து தலைவர் பதவியில் நீட்டிக்க வைக்க கட்சியின் மூத்த தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். ஆனால் ராகுல் காந்தி, ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெறுவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்.

இதையடுத்து, நீண்ட நாட்களாக தலைவர் இல்லாத சூழ்நிலையில். காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னரே நடைபெறும் என்று காங்கிரஸ் தெரிவித்திருந்தது. 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP