காங்கிரஸ் தலைவராக தொடரப்போவதில்லை: ராகுல் திட்டவட்டம்!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடரப்போவதில்லை என்ற தன்னுடை நிலைப்பாட்டை ஏற்கனவே கூறிவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 | 

காங்கிரஸ் தலைவராக தொடரப்போவதில்லை: ராகுல் திட்டவட்டம்!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடரப்போவதில்லை என்ற தன்னுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே கூறிவிட்டதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக தான் நீடிக்க போவதில்லை என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

 தேர்தலையடுத்து நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியக் குழு கூட்டத்திலும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க முன்வந்து, பல்வேறு தலைவர்கள் அதனை நிராகரித்தாக கூறப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் மாநிலத் தலைவர்கள் பலர் தங்களது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகக் கூறி அதற்கான கடிதத்தை காங்கிரஸ் தலைமையகத்துக்கு அனுப்பி விட்டதாக தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையில், ராகுல் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர முடியும் என்று கட்சியின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று கருத்து கூறியிருந்தார். 

இதுகுறித்து தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று  அசோக் கெலாட்யின் எதிர்பார்ப்பு குறித்து பதிலிறுக்கும் வகையில் கருத்து தெரிவித்த அளித்த ராகுல், "காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடரப்போவதில்லை என்ற என்னுடைய நிலைப்பாட்டை நான் ஏற்கெனவே வெளிப்படையாகக் கூறிவிட்டேன். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிப்பதற்கு எதுவுமில்லை என்றும், என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை" என்றும் ராகுல் செய்தியாளர்களிடம் அறுதியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP