கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏகள் கூட்டம்

கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், இன்று மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
 | 

கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏகள் கூட்டம்

கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், இன்று மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பெங்களூரில் இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து எம்எல்ஏக்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த  அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதற்கிடையே சொகுசு விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஆனந்த் சிங் எம்எல்ஏ காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், இன்று மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP