எம்.எல்.ஏக்களை கடத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில் அமளி!

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் பட்டீலை பாஜகவினர் கடத்தியதாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் புகார் தெரிவித்துள்ளனர்.
 | 

எம்.எல்.ஏக்களை கடத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில் அமளி!

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் பட்டீலை பாஜகவினர் கடத்தியதாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் புகார் தெரிவித்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் காணாமல் போனதாகவும், அவரை பாஜகவினர் தான் மும்பைக்கு கடத்தி சென்றுள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 

கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமார் சட்டப்பேரவையில் பேசும்போது, "காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜகவினர் கடத்தியுள்ளனர். நேற்று எங்களுடன் இருந்த ஸ்ரீமந்த் பட்டீல் இன்று மும்பையில் இருக்க காரணம் என்ன? கடத்தப்பட்ட எம்.எல்.ஏக்களை மீட்டுத்தர வேண்டும்" என்று பேசினார். 

பெங்களுருவில் உள்ள ரிசார்ட்டில் மற்ற எம்.எல்.ஏக்களுடன் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் பட்டீல் நேற்று இரவு மும்பை சென்றதாகவும், மும்பையில் இருந்த அவருக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுதால் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP