சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏவுடன் காங்கிரஸ் அமைச்சர் பேச்சுவார்த்தை!

கர்நாடக சட்டப்பேரவையிலே வைத்து காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவகுமார், பாஜக எம்.எல்.ஏ ஸ்ரீராமலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 | 

சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏவுடன் காங்கிரஸ் அமைச்சர் பேச்சுவார்த்தை!

கர்நாடக சட்டப்பேரவையிலே வைத்து காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவகுமார், பாஜக எம்.எல்.ஏ ஸ்ரீராமலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

கர்நாடகாவில் ஆளும் குமாரசாமி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  

இதையடுத்து, முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அப்போது மதிய உணவு இடைவேளைக்காக அவை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையிலே பாஜக எம்.எல்.ஏ. ஸ்ரீராமுலு உடன் காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமார் சந்தித்து பேசினார்.

பாஜக எம்.எல்.ஏ.விடம் துணை முதல்வர் பொறுப்பை கேட்டதாகவும், அதற்கு எம்.எல்.ஏ, பாஜக துணை முதல்வர் பொறுப்பை வழங்காது என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இருவரும் பேரவையில் சந்தித்து பேசியது கர்நாடக அரசியல் சூழ்நிலையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP