மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள்

மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு, பல காங்கிரஸ் தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருவதுடன், இந்தியாவின் விடுதலைக்காக அயராது போராடிய அவரின் போராட்டத்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
 | 

மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள்

மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு, பல காங்கிரஸ் தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருவதுடன், இந்தியாவின் விடுதலைக்காக அயராது போராடிய அவரின் போராட்டத்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை நாடே கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், சோனியா காந்தி, மன்மோகன் சிங் உட்பட பல காங்கிரஸ் தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "யுத்தத்திற்கு யுத்தம் என்றில்லாமல், அன்பும், உண்மையும், அகிம்சை வழியுமே நமக்கு சுதந்திரத்தை பெற்று தரும் என்று மக்களுக்கு எடுத்துக்கூறி, தன் வாழ் நாள் முழுவதும் இந்திய சுதந்திரத்திற்காக அர்பணித்த நமது தேச தந்தையின் 150வது பிறந்தநாளில் நாம் அனைவரும் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

 

காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கே.சி.வேணுகோபால், "உலகம் எத்தகைய நிலையை எட்டினாலும் மஹாத்மா காந்தியின் கொள்கைகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன" எனக் கூறினார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பதிவில், காந்தியின் கொள்கைகளை பஜக கடைப்பிடிப்பதில்லை எனவும், காந்திஜியின் கனவுகளை இந்த மத்திய அரசால் நனவாக்க முடியாது என்று குறிப்பிடும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், "காந்தியின் கொள்கைகள் : 1. உண்மை 2.சகிப்புத்தன்மை 3. அகிம்சை 4. பன்முகத்தன்மை என்றும், ஆனால் இன்றைய இந்தியாவின் நிலை 1. போலியான செய்திகள், போலியான தகவல்கள், புரலிகள் 2. வெறுக்கத்தக்க செயல்கள் 3. வன்முறை 4. பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சிகள் என்று மத்திய அரசை தாக்கி பதிவிட்டுள்ளார்.

 

 

மேலும், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெஹ்லாட்,  ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பிலாட், ஜ்யோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ் மற்றும் மெய்ரா குமார் போன்ற பல தலைவர்கலும் மஹாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தி தங்களது நன்றியை தெரிவித்துள்ள 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP