காங்கிரஸுக்கு நம் தேசம் குறித்து தொலைநோக்குப் பார்வை கிடையாது:மோடி குற்றச்சாட்டு

கர்தார்பூர் பாகி்ஸ்தான் வசம் சென்றதற்கு, தொலைநோக்கு பார்வையற்ற காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். ஆனால் தற்போது இந்த வழித்தடத்தை திறந்துவிட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
 | 

காங்கிரஸுக்கு நம் தேசம் குறித்து தொலைநோக்குப் பார்வை கிடையாது:மோடி குற்றச்சாட்டு

சீக்கியர்களின் புனித ஸ்தலமான கர்தார்பூர், பாகி்ஸ்தான் வசம் சென்றதற்கு, தேசத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையற்ற காங்கிரஸ் கட்சியின் ஆட்சியே காரணம் என்று பிரதமர்  நரேந்திர மோடி குற்றச்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கார்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது மேலும் பேசியதாவது:
நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது, தேசம் பிரிவினை அடைவதைப் பற்றி சிலர் துளியும் கவலைப்படாமல் பதவிகளை பெறவதிலேயே முனைப்பாக இருந்தனர். இதன் காரணமாகவே, சீக்கியர்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றான கர்தார்பூர் பாகிஸ்தான் வசம் சென்றது. 
தேசத்தின் பாரம்பரிய பெருமைகளைப் பற்றி கருத்தில் கொள்ளாமல், தொலைநோக்குப் பார்வையின்றி காங்கிரஸ் செயல்பட்டு வந்துள்ளது என்பதற்கு கர்தார்பூர் சிறந்த உதாரணம். 
ஆனால் தற்போது பாஜக ஆட்சியில், இந்த வழித்தடத்தை இந்தியர்களுக்காக திறந்துவிட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது என்று மோடி பேசினார்.

சீக்கிரயர்களின் குருவான குருநானக் அவரது வாழ்வின் அந்திம காலத்தில் அவர் செய்து வந்த சமுதாயபணிகளை நிறுத்துவிட்டு தவம் புரிந்து உயிர் துறைந்த இடமே கர்தார்பூர்  என அழைக்கப்படுகிறது. சீக்கியர்கள் இந்த இடத்தை புனிதத் தலமாகக் கருதுகின்றனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP