பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண் விமானி: நவீன் பட்நாயக் வாழ்த்து

அர்பணிப்புடன் முயற்சி செய்து விமானியாகியுள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண் விமானி அனுப்பிரியா லக்ராவுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

ஒடிசாவின் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மல்கன்கிரி மாவட்டத்தை சேர்ந்தவர் அனுப்பிரியா லக்ரா (23). இவரது தந்தை மரினியாஸ் லக்ரா ஒடிசா காவல்துறையில் ஹவில்தாராக பணியாற்றி வருகிறார்.  அனுப்பிரியா தனது பள்ளி படிப்பை மல்கன்கிரியில் உள்ள ஒரு கான்வென்ட்டிலும், மேல்நிலை படிப்பை செமிலிகுடாவில் உள்ள ஒரு பள்ளியிலும் படித்தார்.

தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்த லக்ரா, தான் ஒரு விமானி ஆக வேண்டம் என்ற கனவுடன் பொறியியல் படிப்பை விட்டு வெளியேறி விமானிக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத தொடங்கியுள்ளார். அவரின் முயற்சியால் 2012 இல் புவனேஸ்வரில் உள்ள பைலட் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.

இந்நிலையில், தனியார் விமான நிறுவனம் ஒன்றில் வணிக விமானத்தை இயக்கும் இணை விமானியாக அனுப்பிரியா லக்ரா சேர உள்ளார். இதன் மூலம் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற சாதனை படைத்துள்ளார். 

அர்ப்பணிப்பு மற்றும் விடா முயற்சி அரிய வாய்ப்பை பெற்ற லக்ராவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இவரது வெற்றி பலருக்கு முன் உதாரணமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP