அருண் ஜெட்லிக்கு இரங்கல்: கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய அணி!

மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லிக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.
 | 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து, விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் எடுத்துள்ளது.

தொடர்ந்து நாளை நடைபெறும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கருப்புப் பட்டை அணிந்து இந்திய வீரர்கள் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிசிசிஐயின் முன்னாள் துணைத் தலைவராகவும், டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் அருண் ஜெட்லி பதவி வகித்துள்ளார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண்ஜெட்லி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். டெல்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP