அசாமில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: ஒருவர் பலி; 14 பேர் படுகாயம்

அசாமில் முஸ்லீம்கள் வழிபாட்டில் இருந்த போது, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.
 | 

அசாமில் ஹைலகண்டி(Hailakandi) எனும் பகுதியில் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் சாலையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனை எதிர்த்து மற்றொரு குழுவினர், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியது. பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மோதலை கட்டுப்படுத்தினர். 

இந்த மோதலில், 15 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் நாளை மாலை 7 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், துணை இராணுவப் படையினர் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP