வருமான வரித்துறையின் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு!

முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வருமான வரித்துறையின் தலைமை ஆணையர், முதன்மை ஆணையர்கள் உள்ளிட்ட 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 | 

17வது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மத்தியில் அமைந்துள்ளது. 

இதில், கடந்த முறை பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்த நிர்மலா சீதாரானுக்கு இந்த முறை நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் முதலாவதாக அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

அதன்படி, முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தலைமை ஆணையர், முதன்மை ஆணையர்கள் உள்ளிட்ட வருமான வரித்துறையின் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டுள்ளார். நிதி அமைச்சகத்தின் விதி எண் 56ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வருமான வரித்துறையின் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு!

அதாவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள், அதிக சொத்து வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் இந்த 12 மூத்த அதிகாரிகளை கட்டாயமாக பதவி விலகும்படி நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது அரசியல் சூழலில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்ட சில நாட்களில், இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து, அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

கட்டாய  ஓய்வு பெறும் 12 மூத்த அதிகாரிகளின் விபரம்: 

1. ராம் குமார் பார்கவா (துணை ஆணையர், லக்னோ)

2. அலோக் குமார் மித்ரா (ஆணையர், கொச்சி) 

3. சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா (ஆணையர், நொய்டா) 

4. அருளப்பா. பி (ஆணையர், கொச்சி) 

5. அஜோய் குமார் சிங்(ஆணையர், கொல்கத்தா)

6. பி பி ராஜேந்திர பிரசாத் (ஆணையர், குஜராத்) 

7. ஹாக்கி ராஜ்வன்ஷ் (ஆணையர், தமிழ்நாடு) 

8. ஸ்வேதாப் சுமன் (ஆணையர், கவுகாத்தி) 

9. அண்டாசு ரவீந்தர் (கூடுதல் ஆணையர், புவனேஷ்வர்) 

10. விவேக் பத்ரா (கூடுதல் ஆணையர், தமிழ்நாடு) 

11. அசோக் குமார் அகர்வால் (இணை ஆணையர், டெல்லி)

12. சந்தர் ஸைன் பாரதி (கூடுதல் ஆணையர், அலகாபாத்)

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP