விருப்பமுள்ளோருக்கு ஆதார் விவரங்களை திரும்பத் தர ஆணையம் முடிவு!

விருப்பமுள்ளோருக்கு அவர்களின் ஆதார் விவரங்களை திரும்பத் தரும் வகையில், ஆதார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இந்திய தனிநபர் அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
 | 

விருப்பமுள்ளோருக்கு ஆதார் விவரங்களை திரும்பத் தர ஆணையம் முடிவு!

தங்களின் ஆதார் விவரங்களை  திரும்பப் பெற விரும்புவோருக்கு அதற்கான வழிமுறைகளை செய்து தரும் வகையில், ஆதார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) முடிவு  செய்துள்ளது.

பொதுமக்களின் ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கும் ஆதார் சட்டத்தின் 57 -ஆவது பிரிவு நீக்க வேண்டுமென, கடந்த செப்டம்பர் 26 -ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தங்களின் ஆதார் விவரங்களை திரும்பப் பெற விரும்புவோருக்கு அதற்கான வழிமுறைகளை செய்து தரும் வகையில், ஆதார் சட்டத்தில் புதிய பிரிவை சேர்க்க  யுஐடிஏஐ முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதென மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சட்டப் பிரிவு நடைமுறைக்கு வரும்பட்சத்தில், ஒருவர் தனது ஆதார் எண்,  பயோமெட்ரிக் தகவல்கள் உள்ளிட்ட ஆதார் தொடர்பான தமது அனைத்து விவரங்களையும் திரும்பப் பெற முடியும்.அதேசமயம், அந்த நபர் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள அரசின் பல்வேறு நலத்  திட்டங்கள் மற்றும் மானியங்களை பெற இயலாது. 

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP