இந்திய ராணுவத் தலைமை தளபதி நாளை ஸ்ரீநகர் செல்கிறார்!

இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நாளை ஸ்ரீநகர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

இந்திய ராணுவத் தலைமை தளபதி நாளை ஸ்ரீநகர் செல்கிறார்!

இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நாளை ஸ்ரீநகர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் ராணுவச் சிப்பாய்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நாளை காஷ்மீர் செல்ல இருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP