இந்தியாவை தேடி வரப் போகும்  கொலம்பஸ்கள்!

இந்தியா, பாகிஸ்தான், பர்மா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் பொருளாதார, வர்த்தக ரீதியாக ஒன்று இணையும். அப்போது ஆயிரக்கணக்கான கொலம்பஸ்கள் இந்தியாவைத் தேடி வருகவார்கள். அந்த நாட்கள் விரைவில் வரும்.
 | 

இந்தியாவை தேடி வரப் போகும்  கொலம்பஸ்கள்!

தமிழகம் என்று ஒரு மாநிலம் எப்போதும் கிடையாது. வெவ்வேறு, பல சமஸ்தானங்கள் இணைந்தது தான் தமிழகம். புதுக்கோட்டை, சிங்கவனம், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை என்று நாடுகளை, ராஜாக்கள் ஆட்சி செய்தார்கள். இன்றைக்கும் கூட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெவ்வேறு கலெக்டர் தான் ஆட்சி செய்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எஸ்பி தலைமையில் தனிப்படை உள்ளது. 

ரயிலில் பயணம் செய்யும் போது வாழைப்பழ வியாபாரியை கவனியுங்கள், ஒவ்வொரு நாட்டிலும் வாழைப்பழத்தை வெவ்வேறு விதமாகத்தான்  வியாபாரிகள் உச்சரிப்பார்கள்.  இத்தனை வேறு பாடு கொண்ட மாவட்டங்கள் எப்படி ஒன்றாக இருக்க முடியும். இது மாநிலமே கிடையாது. இப்படி புள்ளிவிபரங்கள், வரலாற்று ஆதாரங்களை கொண்டு மிக நீண்ட கட்டுரையை புரியாத வார்த்தைகள் போட்டு எழுதினால் அது எந்த அளவிற்கு அபத்தமோ அந்த அளவிற்கு அபத்தமானது தான் இந்தியா ஒரு நாடு அல்ல சமஸ்தானங்களின் இணைப்பு என்பதும். 

இந்தியா ஒரே நாடு என்பதற்கு, இன்றைக்கும் உதாரணமாக இருப்பது காங்கிரஸ், இந்தி, இந்து ஆகியவை தான். நேருவை, இந்திராவை, காந்தியை, ராகுலை யாரும் வட நாட்டு தலைவர்கள் என்று ஒதுக்கி வைப்பது கிடையாது. பாணி பூரி, சல்வார் கம்மீஸ் போல அவர்களையும் தமிழர்களாகவே ஏற்றுக் கொண்டு விட்டோம். நம் தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை கூட டெல்லியில் இருக்கும் சோனியா, ராகுல்தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் தான் திமுக உடன் கூட்டணி அமைத்து தமிழகத்தை வாழ வைப்பதா என்று முடிவு செய்கிறார்கள். ஒரே நாடாக இருப்பதால் தான் துாத்துகுடி எம்எல்ஏவிற்கு கூட சோனியா அன்னையாகிறார். இப்படி காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, ஒரே நாடு என்பதற்கு வாழும் அடையாளம் காங்கிரஸ். 

இந்தியாவை தேடி வரப் போகும்  கொலம்பஸ்கள்!

இன்றைக்கும் கூட நாடு முழுவதும் இந்தி படிக்கிறார்கள். தமிழகத்தில் கருணாநிதியின் பேச்சை கேட்டு வாழும் அழகிரி போன்றவர்களை தவிர்த்து பல திமுகவினரே இந்தி படிக்கிறார்கள். பள்ளிக்கூடமே நடத்துகிறார்கள். இந்த வகையிலும் இந்த நாடு ஒரே நாடு என்பதை உணர முடியும். 

அடுத்து இந்துமதம். இது கொஞ்சம் சிக்கலானது. அறிஞர்கள் இதைபற்றி பேச வேண்டும். ஆனால் அவர்கள் மவுனமாக இருப்பதால் மற்றவர்கள் பேச வேண்டி இருக்கிறது.  மகாபாரத்தில் திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி. அவர்தான் துரியோதனின் தாய். அவர் பிறந்த காந்தாரம் இன்று இந்தியாவில் இல்லை. ஒரு காலகட்டத்தில் அதுவும் இந்த நாட்டுடன் இருந்தது. 

இந்தியாவை தேடி வரப் போகும்  கொலம்பஸ்கள்!

இந்துக்களின் புனித தலமான பஞ்ச தீர்த்தகம் பாகிஸ்தானில் உள்ளது. அதனை அந்த நாடு புனித தலமாக அறிவித்துள்ளது. மகாபாரத மன்னர்கள் பலரின் தேசம் இன்று பாகிஸ்தானில் தான் உள்ளது.  பெரியாரின் பெயரான ராமசாமி நாடு முழுவதும் உள்ள பெயர். மாநிலத்திற்கு மாநிலம் ராமசாமி, ராமுலு, ராம்சிங் என்று சிறிய மாற்றங்களுடன் உள்ளது. வடக்கே இருப்பவருக்கு இராமேஸ்வரம் புனிதம், தெற்கே இருப்பவர்களுக்கு காசி புனிதம். இந்த நம்பிக்கையை எது ஏற்படுத்தியதோ, அதுவே இந்தியா ஒரே நாடு என்பதற்கான ஆதாரம். 

வட மேற்கு இந்தியாவை ஆண்ட இந்து மன்னனின் ஆட்சி காந்தாரம் முதல் காஷ்மீர் வரை இருந்தது. இதில் தற்போதுள்ள பாகிஸ்தானும் அடக்கம். அரேபியர்கள் படையெடுப்பு காரணமாகதான் பாகிஸ்தானில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்களாக மாறினர். அதற்கு முன்பு வரை அவர்கள் இந்துக்கள், அல்லது பவுத்தர்கள் தான். 

இந்தியாவை தேடி வரப் போகும்  கொலம்பஸ்கள்!

ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்கு பின்னர் தான் பாகிஸ்தான், இந்தியா என்று 2 நாடுகள் உருவாகின. இந்திரா உபயத்தால் வங்காளம் உருவானது.  இப்படி ஒரே தேசமாக இருந்த தேசம் துண்டு துண்டாக உடைந்து சிதறியது. இதை புரிந்து கொண்டு ஜெர்மன் மீண்டும் இணைந்தது போல, வேறு சில நாடுகள் மீண்டும் பிரிவை மறந்து ஒன்று சேர்ந்தது போல மீண்டும் இந்தியாவை ஒன்று இணைக்க வேண்டிய தலைமை பிரிந்து சென்றது எந்த நாட்டிலும் இல்லை. இந்தியாவிலோ இன்னும் பரிதாப நிலை. இந்தியா ஒரே நாடு இல்லை என்று எண்ணம் கொண்ட பலர் நாட்டில் தலைவராக உலாவருகின்றன. 

நல்லவேளை இறைவன் இந்தியா ஒரே நாடு என்று உணர்ந்த உள்துறை அமைச்சரை உருவாக்கி உள்ளது. இதனால் தான் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் எப்போது பாகிஸ்தானுடன் அங்கமாக இருந்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார். சில காலத்திற்கு முன்பு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றித்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவை தேடி வரப் போகும்  கொலம்பஸ்கள்!

நாட்டை பற்றிய தெளிவான சிந்தனை உள்ள இவரைப் போன்ற அமைச்சர்கள் தான் இன்றைய தேவை. காஷ்மீர் விவகாரத்தில் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது மத்திய அரசு. வரும் காலங்களில் குறிப்பாக ராஜ்யசபாவிலும் மத்திய அரசுக்கு பெரும்பான்மை கிடைத்த பின்னர் இது போன்ற நடவடிக்கைகள் வேகம் எடுக்கும். அதன் பின்னர் அரசியலில் இணைகிறதோ இல்லையோ, இந்தியா, பாகிஸ்தான், பர்மா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் பொருளாதார, வர்த்தக ரீதியாக ஒன்று இணையும். அப்போது ஆயிரக்கணக்கான கொலம்பஸ்கள் இந்தியாவைத் தேடி வருகவார்கள். அந்த நாட்கள் விரைவில் வரும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP